நெல்கொள்முதலின் பொழுது ஈரப்பதத்திற்கு சலுகையோடு தரத்திர்க்கும் சலுகை தேவை

Update: 2025-01-24 14:06 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்டு அறுவடைக்கு தயாரான நெல்மணிகள் அதிக இருப்பது உள்ளதால் உணவு மற்றும் விநியோகம் துறை உதவி இயக்குனர் பிரீத்தி உள்ளிட்ட மத்திய குழுவினர் தலைமையிலான அதிகாரிகள் நெல்லின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து, அதன் மாதிரிகளை சேகரித்து சென்றனர்.  இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரிகளிடம் பேசிய தன்னிறைவு பசுமை கிராமங்கள் இயக்க தேசிய அமைப்பாளர் ஆறுபாதி ப.கல்யாணம் கூறுகையில், நெல்லின் ஈரப்பதத்தை 22 சதவீதமாக தளர்த்தி கொள்முதல் செய்வதோடு மட்டும் அல்லாமல், தரம் திரிபுகளான நெல்லின் நிறம் மற்றும் முளைத்த நெல்கள் ஆகியவற்றையும் கருத்தில் கொள்ளாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தார். மேலும் 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதத்துக்கு இடைப்பட்ட சதவிகிதத்தில் உள்ள நெல்லுக்கு விவசாயிகளிடமிருந்து எந்த தொகையும் பிடித்தம் செய்யக் கூடாது என அவர் கோரிக்கை விடுத்தார். மேலும் மாநில அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்று தர வேண்டுமென மாநில அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, எம்எல்ஏ நிவேதா முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து இந்த ஆய்வு குறித்து  மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த கன மழையில் அறுவடை செய்ய வேண்டிய பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் வயலில் சாய்ந்து சேதமடைந்தது. நெல்லை அறுவடை செய்ய முடியவில்லை. 17 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ளது என்பதால் தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உயர்த்தி நெல் கொள்முதல் செய்வதற்காக மத்திய குழுவினர் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு செய்துள்ளனர். ஈரப்பதம் 17 சதவீதத்திற்கு மேல் உள்ளது. நெல்லின் மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துள்ளனர். மத்திய குழுவினர் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஆய்வு செய்ய வந்த குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நன்றி தெரிவித்தார்.

Similar News