தமிழக முதல்வர் கொடுத்த அழுத்தத்தால் மத்திய அரசு டங்ஸ்டன் எடுக்கும் சுரங்க அணுமதியை ரத்து செய்தது
மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ததற்கான அறிவிப்பை பெற்று தந்தவர் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழக மக்களின் ஒட்டுமொத்த உரிமைகளையும் பாதுகாக்கின்ற தலைவராக விளங்குவதாக மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் புகழாரம்;
:- மயிலாடுதுறையில் திமுக மாவட்ட மாணவரணி மற்றும் நகர திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன், தலைமைக் கழக பேச்சாளர்கள் நாத்திகம் நாகராசன், சின்ன மாரியப்பன் சிறப்புரையாற்றினர். இதில் பேசிய அமைச்சர் மெய்யநாதன் கூறுகையில் முதலமைச்சராக இருக்கும் வரை இந்த மண்ணில் டங்ஸ்டன் சுரங்கத்தை அனுமதிக்க மாட்டேன் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் நம் முதலமைச்சர். மதுரை மக்கள் 50,000 பேர் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் 20 கிலோமீட்டர் நடந்து சென்ற போது காவல்துறை பாதுகாப்பு அளித்து இன்றைக்கு மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்வதற்கான அறிவிப்பை பெற்று தந்தவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். தமிழ்நாட்டு மக்களின் அத்தனை உரிமைகளையும் பாதுகாக்கின்ற தலைவராக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விளங்கி வருவதாக கூறினார். முன்னதாக மொழிப்போர் தியாகிகள் மாணவர் சாரங்கபாணி உள்ளிட்ட மொழிப்போர் தியாகிகளுக்கு அமைச்சர் மெய்யநாதன் மற்றும் கூட்டத்தில் பங்கேற்றோர் அனைவரும் வீரவணக்கம் செலுத்தினர்.