ராமநாதபுரம் பள்ளியில் குடியரசு தின விழா நடைபெற்றது
அமிர்தா வித்யாலயம் பள்ளியில் 76 குடியரசு தின விழாவானது கோலாகலமாக நடைபெற்றது;
ராமநாதபுரம் அமிர்தா வித்யாலயம் பள்ளியில் 76 குடியரசு தின விழாவானது கோலாகலமாக நடைபெற்றது. விழாவிற்கு பிரம்மச்சாரிணி லட்சுமி அம்மா முன்னிலை வைக்க, பள்ளியின் முதல்வர் திருமதி கோகிலா மற்றும் துணை முதல்வர் பாலவேல் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் விழாவானது சிறப்புடன் நடைபெற்றது. மேலும் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக ஷாஜி மருத்துவமனை டாக்டர் ஷாஜகான் பல்மருத்துவர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் மாணவர்களின் அணிவகுப்பு, பரத நாட்டியம், யோகாசனம்(பிரமீடு), இசை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி காட்டினர். அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுகளை மாணவர்களின் பெற்றோர்களும் கண்டு களித்து பாராட்டினர்.