ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் திட்டம் - எம். பி பேச்சு

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இந்த திட்டம் நிறைவேறினால் வாக்காளர்களுக்கான மதிப்பை குறைக்கும் மேலும் மாநில கட்சிகளை அப்புறப்படுத்தவும், அதன் ஆதிக்கத்தை குறைப்பதாக அமையும். இச்செயல் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதாக இந்தத் திட்டம் அமையும்;

Update: 2025-01-26 15:04 GMT
"ஒரே நாடு ஒரே தேர்தல் " கலந்துரையாடல் நிகழ்ச்சி பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனை கூட்ட அரங்கில், மாவட்ட குழு உறுப்பினர் எழுத்தாளர் எட்வின் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் டாக்டர்.கருணாகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக கட்சியின் மாநில குழு உறுப்பினரும் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினருமான ர. சச்சிதானந்தம் பங்கேற்று சிறப்புரையாற்றுகையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கடந்து வந்த பாதை மற்றும் இத்திட்டத்தால் ஏற்படும் பாதகத்தை குறித்து விரிவாக எடுத்துரைத்த அவர் மேலும் பேசுகையில், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இந்த மசோதா வெற்றி பெறாது என தெரிந்தும் ஏதாவது ஒரு வழியில் இதை நிறைவேற்ற வேண்டும் என ஒன்றிய அரசு உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இந்த திட்டம் நிறைவேறினால் வாக்காளர்களுக்கான மதிப்பை குறைக்கும் மேலும் மாநில கட்சிகளை அப்புறப்படுத்தவும், அதன் ஆதிக்கத்தை குறைப்பதாக அமையும். இச்செயல் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைப்பதாக இந்தத் திட்டம் அமையும், எனவே இத்திட்டத்தின் பாதிப்பு குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய கடமை நம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள அனைவருக்கும் இந்த பொறுப்பு உள்ளது என தெரிவித்தார். தொடர்ந்து இந்த திட்டம் குறித்து சந்தேகம் மற்றும் விளக்கங்களையும் கட்சியினர் உட்பட பலர் பாராளுமன்ற உறுப்பினரிடம் கேட்டு விளக்கம் பெற்றனர். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் பி ரமேஷ், மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்ட குழு, மாணவர் சங்கத்தினர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Similar News