ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் குடியரசு தின விழா

நீதிமன்றத்தில் பணியாற்றும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என்றும் அனைவரும் தனது பணியினை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்;

Update: 2025-01-26 16:53 GMT
இந்தியாவின் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் மாண்புமிகு மாவட்ட குடும்ப நல நீதிபதி தனசேகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தலைமையேற்று பேசும்போது இந்தியா குடியரசு ஆகிய 76 வது ஆண்டு கொண்டாடுகின்றோம் இந்த தருணத்தில் நம் நீதிமன்றத்தில் பணியாற்றும் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என்றும் அனைவரும் தனது பணியினை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார் போட்டி பொறாமைகள் இல்லாத இந்திய சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் குடியரசு தின விழாவில் பேசினார் , மேலும்,பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் சார்பு நீதிபதியும் ஆகிய மகேந்திர வர்மா மற்றும் மூத்த வழக்கறிஞர் வாசுதேவன் மற்றும் பார் அசோசியேசன் சங்க செயலாளர் சேகர் மற்றும் வழக்கறிஞர் பேரா முருகையன் மற்றும் அட்வகேட் அசோசியேசன் சங்கத் தலைவர் செந்தாமரைக்கண்ணன், துறை பெரியசாமி அரசு வழக்கறிஞர் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்துரை வழங்கினார்கள் இதில் பெரம்பலூர் சார்பு நீதிபதி அண்ணாமலை மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜெயக்குமார் உட்பட அனைத்து நீதிபதிகளும் மற்றும் வழக்கறிஞர்களும் அரசு வழக்கறிஞர்களும் நீதிமன்ற ஊழியர்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பாக குடியரசு தினம் கொண்டாடப்பட்டது.

Similar News