செங்குணம் அரசு பள்ளிகளில் குடியரசு தின விழா
அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் கணித பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இரா.ராகுல் , பெ.அஜய், க.மோகிதபிரியன், சி.சந்தியா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரொக்க பணம் தலா ரூ 1000 வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.;
பெரம்பலூர் அருகே செங்குணம் அரசு பள்ளிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. பெரம்பலூர் வட்டம், செங்குணம் கிராம அரசு பள்ளிகளில் இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. செங் குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமையிலும், செங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் அமுதா தலைமையிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டு கொடிக்கு வணக்கம் கூறி மரியாதை செலுத்தி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் 2023-24 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு அரசு பொது தேர்வில் கணித பாடத்தில் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் இரா.ராகுல் , பெ.அஜய், க.மோகிதபிரியன், சி.சந்தியா ஆகியோருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் ரொக்க பணம் தலா ரூ 1000 வழங்கி பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்து ஊக்கம் அளிக்கப்பட்டன. இதேபோல் நடப்பாண்டில் இரண்டாம் பருவ தேர்வில் வகுப்பு வாரியாக சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பொது அறிவு சார்ந்த புத்தகங்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டன. இந்த விழாவில் செங்குணம் குமார் அய்யாவு உட்பட்ட பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளி மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்