வாகன பந்தயத்தில் ஈடுபட்ட இருவர் உயிரிழப்பு.

உயிரிழப்பு;

Update: 2025-01-27 04:27 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகர் பகுதியில் இருந்து ஆவியூர் வரை மூன்று விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் வாகன பந்தயத்தில் ஈடுபட்டுள்ளனர். திருக்கோவிலூர் 5 முனை சந்திப்பிலிருந்து நான்கு முனை சந்திப்பு வழியாக சைலோம் சென்று அங்கிருந்து ஆவியூர், வடக்கு நெமிலி, ஆவி.கொளப்பாக்கம் கூட்ரோடு வழியாக மீண்டும் 5 முனை சந்திப்பை வந்து அடையும் வகையில் வாகன பந்தயத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இந்த வாகன ரேசின் போது, மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் ஆகிய இரண்டு சிறுவர்கள் ஆர்15 இருசக்கர வாகனத்தில் பந்தயத்தில் ஈடுபட்டபோது திருக்கோவிலூர் அடுத்த சைலோம் பகுதியில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அதிவேகமாக சென்றதால் நிலை தடுமாறு கீழே விழுந்துள்ளது. இதில், வாகனத்தில் பயணம் செய்த மோகன்ராஜ் மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த, திருக்கோவிலூர் போலீசார் இருவரது உடலையும் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, பின்னர் பிரியத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News