ராமநாதபுரம் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது

இருசக்கர வாகன பழுது நீக்குவோர் தொழிலாளர் நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.;

Update: 2025-01-27 10:24 GMT
ராமநாதபுரத்தில் புதிய உதயமாக இருசக்கர வாகனம் மற்றும் மெக்கானிக் நலன் கருதி அன்பு முகவை மாவட்ட இரண்டு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் தொழிலாளர் நல சங்கம்புதிதாக துவங்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக தமிழக முதலமைச்சரின் விருது பெற்ற எஸ் ஏ அமீர் அம்சாவும், செயலாளராக குமரய்யா கோயில் ஜி. பிரசாத் பொருளாளராக ஜி காளிதாஸ் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர் இதன் துவக்க விழா ராமநாதபுரம் நாடார் தெரு பகுதியில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் அரங்க மஹாலில் மிக சிறப்பாக நடைபெற்றது. ராமநாதபுரம் நகரில் உள்ள அனைத்து ஸ்பேர் பார்ட்ஸ் கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த விழாவில் பங்கு பெற்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகன பழுது நீக்குவோர்கள் சங்கம் புதிதாக துவங்கப்பட்டுள்ளது இந்த சங்கத்தில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பாக பணி செய்ய உள்ளோம் 24 மணி நேரமும் இருசக்கர வாகன பழுது நீக்குவோர்கள் பல்வேறு பணிச்சுமையின் காரணமாக தொழில் செய்து வருகின்றனர் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஆதரவு கொடுத்து அன்பு சங்கம் மென்மேலும் வளர உதவ வேண்டும் எனவும் சங்கத்தின் தலைவர் அமீர் அம்சா கேட்டுக்கொண்டார் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர் இருசக்கர உதிரிபாகன விற்பனை உரிமையாளர்கள் பலர் சங்கத்தை வாழ்த்தி பாராட்டி வரவேற்றனர்

Similar News