மக்களுடன் முதல்வர்“ திட்டத்திம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது

மக்களுடன் முதல்வர் (ஊரகம்)“திட்டத்தின் மூலம் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் 28.01.2025, 29.01.2025, 30.01.2025 மற்றும் 31.01.2025 ஆகிய நாட்களில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.;

Update: 2025-01-27 12:01 GMT
“மக்களுடன் முதல்வர்“ திட்டத்தின் கீழ் 28.01.2025 (செவ்வாய்கிழமை) அன்றைய தினம் நடைபெற இருந்த ஐந்து முகாம்கள் மட்டும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது – மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தகவல். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், மற்றும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சிகளில் “மக்களுடன் முதல்வர் (ஊரகம்)“திட்டத்தின் மூலம் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம்கள் 28.01.2025, 29.01.2025, 30.01.2025 மற்றும் 31.01.2025 ஆகிய நாட்களில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் 28.01.2025 அன்று மட்டும் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதிக்குட்பட்ட டி.களத்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட செஞ்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும், லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியிலும், எளம்பலூர் இந்திராநகரில் உள்ள ரோவர் மேல்நிலைப்பள்ளியிலும், எசனை அம்பேத்கர் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியிலும்
நடைபெறுவதாக இருந்த அனைத்து ஐந்து முகாம்கள் மட்டும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
மேற்படி முகாம்களுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 29.01.2025, 30.01.2025 மற்றும் 31.01.2025 ஆகிய தினங்களில் நடைபெறவிருந்த அனைத்து முகாம்களும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடைபெறும். மக்களுடன் முதல்வர் (ஊரகம்) முகாம்கள் நடைபெறவுள்ள கிராம பொதுமக்கள், தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக முகாம்களில் மனுக்களை அளித்து பயன்பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

Similar News