
கன்னியாகுமரி மாவட்டம் தாழக்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் அறிமுகம் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மண்ணினை பாதுகாப்பது பற்றியும் மண்ணினை பாதுகாத்து மூலிகை செடிகள் வளர்த்து அதன் மூலம் மன்னுயிர் காப்பது பற்றி பொதுமக்களுக்கு விளக்கி கூறப்பட்டது. மேலும் மண்ணுயிர்காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆடாதோடா; நொச்சி; கன்றுகள் வழங்கப்பட்டது தோவாளை வட்டார பூதப்பாண்டி வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் அனைவருக்கும் கன்றுகளை இலவசமாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் துணை வேளாண்மை அலுவலர் ஜீவகன் உதவி வேளாண்மை அலுவலர் சண்முகவேல் உட்பட சுய உதவிக் குழு உறுப்பினர்கள், விவசாய பெருமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.