ராமநாதபுரம் கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனைமாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது;

Update: 2025-01-29 05:21 GMT
ராமநாதபுரம் காட்டு பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரபுதேவா (23). அதே பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (23), இருவரும் நண்பர்களாக பழக வந்துள்ளனர். இருவரும் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி இரவு மது அருந்தி கொண்டிருக்கும்போது இருவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நாகராஜ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பிரபுதேவாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இது தொடர்பாக பஜார் காவல் நிலையத்தில் பிரபுதேவாவின் தாயார் முருகேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் நாகராஜ் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்குக்கான இறுதி கட்ட விசாரணை இன்று ராமநாதபுரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வந்தது. அப்போது நாகராஜன் பிரபுதேவாவை கத்தியால் குத்தி கொலை செய்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து நாகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி மெஹபூப் அலிகான் தீர்ப்பளித்தார். இதையடுத்து இளைஞர் நாகராஜ் ராமநாதபுரம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Similar News