ராமநாதபுரம் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் பறிமுதல் செய்து விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது

ராமேஸ்வரத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி வகைகள் சுமார் 480 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது;

Update: 2025-01-29 05:29 GMT
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் உத்தரவிற்கு இணங்கவும் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஜி விஜயகுமார் அவர்களின் வழிகாட்டலின் படி இன்று ராமேஸ்வரம் பகுதியில் ராமேஸ்வரம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் கு.லிங்கவேல், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகேந்திரன் , நகராட்சி மேற்பார்வையாளர் ஹமீது மற்றும் நகராட்சி பணியாளர்களுடன் ராமேஸ்வரம் நகர் முழுவதும் திடீர் ஆய்வு மேற்கொண்டதில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி வகைகள் சுமார் 480 கிலோ கைப்பற்றப்பட்டதுடன் ரூபாய் பத்தாயிரம் 10000அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தை அமாவாசையை ஒட்டி ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் பொது மக்களுக்கு உணவு வகைகள் வாழை இலையில் மட்டும் பரிமாறவும் , சூடான சாம்பார் டீ வகைகளை அரசால் அங்கீகரிக்கப்பட்ட களன்களில் மட்டும் விற்பனை செய்யவும் உணவு வகைகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறும் எனவும், இரண்டாவது முறை அரசால் தடை செய்யப்பட்ட நெகிழி வகைகள் விற்பனை செய்தால் ரூபாய் 5000, மூன்றாம் முறை விற்பனை செய்தால் ரூபாய் 10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் உணவு வகைகளுக்கு அறிவிக்கப்படுகிறது.

Similar News