மேம்பாலத்தை விரைந்து முடிக்கவும் ரயில்வே அதிகாரிகளிடம் தெரிவித்த எம்பி
மீஞ்சூர் ரயில்வே கேட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுரங்கப்பாதை அமைத்து தரவும் ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தை விரைந்து முடிக்கவும் தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் ஆய்வின்போது அறிவுறுத்தியதாக திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில்;
மீஞ்சூர் ரயில்வே கேட்டில் தொடரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சுரங்கப்பாதை அமைத்து தரவும் ரயில்வே உயர்மட்ட மேம்பாலத்தை விரைந்து முடிக்கவும் தென்னக ரயில்வே அதிகாரிகளிடம் ஆய்வின்போது அறிவுறுத்தியதாக திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தெரிவித்தார் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ரயில்வே கேட் பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் பொன்னேரி எம்எல்ஏ தென்னக ரயில்வே கோட்டை மேலாளர் விஸ்வநாதன் ஈரியா துரை சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் விம்கோ நகரில் உள்ள மெட்ரோ ரயில் சேவை மாதவரம் வரை வந்துள்ள அதனை கும்மிடிப்பூண்டி வரை நீட்டிப்பதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என திருவள்ளூர் எம்பி மீஞ்சூர் ரயில் நிலையத்தில் ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும்,மெட்ரோ ரயில் சேவையை கும்மிடிப்பூண்டி வரை நீட்டிப்பதற்கான சாத்திய கூறுகள் உள்ளன என்றும் அதை செயல்படுத்த வேண்டும் என்றார் அதனைத் தொடர்ந்து மீஞ்சூர் ரயில் நிலையம் அருகே உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் தண்டவாளத்தை கடந்து செல்ல சிரமப்பட்டு வருவதால் சுரங்க பாதை அமைக்க வேண்டும் என்று ஆய்வு செய்ய வந்த எம் பி சசிகாந்த் செந்தில் வலியுறுத்தினார். விரைந்து மேம்பால பணியையும் சுரங்கப்பாதை அமைக்கும் பணியையும் முடித்து தர வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிவித்தார்