கரும்பு அரவைப் பணிகள் துவக்கம்
பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முன்னாள் எம்எல்ஏ தலைமையில் கரும்பு அரவை பணிகள் துவக்கம்;
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடப்பு 2024- 2025 ஆம் ஆண்டு கரும்பு அறுவை பருவ துவக்க விழாவிற்கு ,தர்மபுரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான,தடங்கம் பெ. சுப்ரமணி கலந்துகொண்டு அரவை பணிகளை துவக்கி வைத்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், பாலக்கோடு தொகுதி திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்