ஆட்சியர் தலைமையில் அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம்;
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், தருமபுரி நகராட்சி பகுதிக்குட்பட்ட இராமக்காள் ஏரியினை அழகுப்படுத்தும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இ.ஆ.ப., தலைமையில் அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.இக்கூட்டத்தில் தருமபுரி மாவட்டம். நகராட்சி பகுதிக்குட்பட்ட இராமக்காள் ஏரியினை தூய்மை செய்து, பூங்கா அமைப்பது குறித்தும், பூச்செடிகள் அமைப்பது குறித்தும், வண்ண மிலிரும் தட்டிகள் அமைப்பது குறித்தும் மற்றும் நடைபயிற்சியாளர்களுக்கு மின்விளக்கு வசதி மற்றும் குடிநீர் வசதி குறித்தும், பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தருவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கி. சாந்தி இ.ஆ.ப., அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்கள்.இந்த ஆய்வுக்கூட்டத்தில் நகராட்சி ஆணையர் சேகர், தருமபுரி காவல் துணை கண்காணிப்பாளர் சிவராமன், துப்புரவு அலுவலர் ராஜரத்தினம், பொதுப்பணித்துறை அலுவலர்கள் மற்றும் நடைபயிற்சியாளர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.