இந்திய தேசிய லீக் கட்சி பொதுக்கூட்டம்

இந்திய தேசிய லீக் கட்சியின் பழனிபாபா நினைவு நாள் பொதுக்கூட்டம் பேகம்பூர் திப்பு திடலில் நடைபெற்றது;

Update: 2025-01-29 07:06 GMT
டாக்டர் பழனி பாபா நினைவு நாள் மாபெரும் பொதுக்கூட்டம் இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா அப்துல் ரஹீம் தலைமையில் நடைபெற்றது. தலைமை நிலைய செயலாளர் இம்ரான் முன்னிலை வகித்தார் மாநில பொதுச் செயலாளர் மல்லிப்பட்டினம் இம்ரான் ஒருங்கிணைப்பு செய்திருந்தார். மௌலானா ரஹீம் கம்பம் சாதிக் திருப்பூர் அஸ்ஸலாம் திருப்பூர் மஸ்ஜித் ஃபைரோஸ் பாபா ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர். மூத்த வழக்கறிஞர் வேங்கை சந்திரசேகர் பசுபதி பாண்டியன் புதல்வி சந்தன பிரியா வழக்கறிஞர் காஸ்ட்ரோ மற்றும் திண்டுக்கல் மாவட்ட தலைவர் செயற்குழு மாவட்ட தொழிற்சங்க தலைவர் கனவாய் இப்ராஹிம் நகர செயலாளர் ஜலாலுதீன் நகர பொருளாளர் சேக் பரீத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மேலும் இந்நிகழ்வில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 1.புழல் சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை சிறைவாசிகளாக இருந்து வரும் சகோதரர்கள் #போலீஸ்பக்ரூதீன்,#பண்ணாஇஸ்மாயில்,#பிலால்மாலிக் ஆகியோரை தாக்கிய சிறைக் காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 2.Pfi தேசிய தலைவர் #அபுபக்கர் சாஹிப் அவர்கள் சிறையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற பரோல் வழங்க வேண்டுமெனவும் 3.திருப்பரங்குன்றம் சிக்கந்தர் மலையில் 800 ஆண்டுகள் எவ்வாறு தர்கா வழிபாடு நடந்ததோ அதே போல் எந்த கட்டுபாடுமின்றி வழிபாடு நடத்தவும் தேவையில்லாமல் மத மோதலை உருவாக்க நினைக்கும் இந்துத்துவ அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் 4.இந்திய தேசிய லீக் கட்சியினர் மீதும் குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பொய் வழக்கு போட்டு இளைஞர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கும் காவல்துறையின் அராஜக போக்கை நிறுத்த கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதன்கிழமை காலை 10 மணியளவில் கிடைக்கப்பெற்ற தகவல்

Similar News