விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு தை அமாவாசை ஊஞ்சல் உற்சவம்

திரளான பக்தர்கள் தரிசனம்;

Update: 2025-01-29 16:35 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சந்தை தோப்பில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்தவகையில் தை அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பால் தயிர் இளநீர் பன்னீர் தேன் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிக்க மகாதீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து இரவு அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த உற்சவ மூர்த்தி, கோவிலை மூன்று முறை வலம் வர, வானவேடிக்கை நிகழ்ச்சிகளுடன், பக்தர்கள் அம்மன் வேடமிட்டு நடனமாடி, தீச் சட்டி, வேப்பிலை கரகம் ஏந்தி பக்தி கோஷங்கள் எழுப்பி வலம் வந்தனர். தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அம்மன் எழுந்தருள தாலாட்டு பாடி பக்தர்கள் ஊஞ்சலை ஆட்டி வழிபட்டனர்.

Similar News