விருத்தாசலத்தில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி

ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடந்தது;

Update: 2025-01-29 16:40 GMT
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஆதிதிராவிடர் நலம் தனி வட்டாட்சியர் வெற்றிவேல் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கலை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பொதுமக்களுக்கு தீண்டாமை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர் இளவரசன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர் கலந்து கொண்டனர்.

Similar News