ராமநாதபுரம் குண்டு சத்தத்தில் கைது செய்ய கோரிக்கை மனு
தமிழ்நாடு வக்பு வாரிய சேர்மன் நவாஸ்கனி எம்பியைஅவமரியாதை செய்தவேலூர் இப்ராஹீமை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் மாவட்டமுஸ்லிம் ஐக்கிய ஜமாத் கோரிக்கை;

ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் சார்பில் மாவட்ட தலைவர் எம். எஸ். ஏ சாஜகான். பொதுச் செயலாளர். ஏ.ஜெய்னுல் ஆலம். துணைத் தலைவர் டி. எம்.அப்துல் முத்தலிப். பொருளாளர் பக்ருல்அமீன். மாவட்டச் செயலாளர்கள் ஐ. அசரப்அலி. எம்.முகமது இலியாஸ் பரமக்குடி எம்.பசீர் அஹமது. எம்.பி நேர்முக உதவியாளர் அப்துல் ஜப்பார் ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் அவர்களை சந்தித்து கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது. ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக வக்ப் வாரிய தலைவருமான கே. நவாஸ் கனி எம்.பி அவர்களை செருப்பால் அடிப்பேன் என்று பொதுவெளியில் கூறியும் அவரது உருவப்படத்தை செருப்பால் அடித்தும் அவமானகரமான செயலில் ஈடுபட்டுள்ள பாஜக சிறுபான்மை பிரிவின் செயலாளர் வேலூர் இப்ராஹிமின் செயல்பாடுகளை இராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் வன்மையாக கண்டிக்கிறது. மத நல்லிணக்கத்தை தமிழக மண்ணில் ஏற்படுத்துவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வருபவரும் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினரும் மற்றும் தமிழக வக்பு வாரியத்தின் தலைவராக இருக்கும் கே. நவாஸ் கனி அவர்களை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி அவமரியாதை செய்த வேலூர் இப்ராஹிமின் செயல் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிர்ச்சியில் ஆளாக்கியுள்ளது. இது போன்ற செயல்களை ஆரம்ப நிலையிலேயே தடுக்காவிட்டால் தேவையற்ற மத மோதல்களும் சட்டம் ஒழுங்கும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்ற கவலையை தெரிவித்துக் கொள்கிறோம். இத்தகைய குற்றச்செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் வேலூர் இப்ராஹீம் மீது உரிய சட்டபூர்வமான நடவடிக்கை எடுத்தும் குறிப்பாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தும் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ ஆவண செய்யுமாறு இராமநாதபுரம் மாவட்ட ஐக்கிய ஜமாத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். என மனுவில் தெரிவித்திருந்தனர்