ராமநாதபுரம் மயானத்திற்கு செல்ல சாலை வசதி வேண்டி கிராம மக்கள் எதிர்பார்ப்பு
முதுகுளத்தூர் அருகேமயானத்துக்கு செல்ல சாலை வசதி இல்லாத தால் இறந்தவரின் உடலை வயல்களின் வழியே தூக்கி செல்லும் அவல நிலை மாற்றம் கிடைக்குமா மக்களை எதிர்பார்ப்பு;

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மரவெட்டி கிராமத் தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மயான கரைக்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை, இதனால் இறந்தவர்களின் உடலை கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவு உள்ள பொது மயானத்துக்கு தற்போது நெல் விவசாயம் நடக்கும் நிலையில் வயல்வெளிகளின் நடுவே இறந்தவரின் உடலை சிரமப்பட்டு தூக்கிச் சென்று அடக்கம் செய்து வருகின்றனர் நேற்று கிருஷ்ணம்மாள் (80) என்ற மூதாட்டி மரணம் அடைந்ததையடுத்து, இன்று அவரது உடலை மயானத்துக்கு செல்லபாதை வசதி இல்லாததால் நெல் விளைந்த வயல்களின் வழியே எடுத்துச்சென்று அடக்கம் செய்தனர். இதனால் பொதுமக்கள் விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தங்கள் பகுதி மயானத்துக்கு செல்ல முறையான சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்