கோட்டக்குப்பம் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு
நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு;
![கோட்டக்குப்பம் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு கோட்டக்குப்பம் அருகே நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு](https://king24x7.com/h-upload/2025/01/30/787719-1000070159_1738214796501_1739180709629.webp)
கா்நாடகம் மாநிலம், பெங்களூரு, காடுகுடி காலனி, பிரிஸ்டீஜ் பாா்க் வியூ அபாா்ட்மென்ட் பகுதியைச் சோ்ந்தவா் சுஷாந்த் தோபல் (45). தனியாா் நிறுவன ஊழியா்.புதுச்சேரிக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்த இவா், தனது மனைவி மற்றும் மகள் பா்னிகாதோபல் (6) ஆகியோருடன் கோட்டக்குப்பத்தை அடுத்த மஞ்சக்குப்பத்தில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்தாா்.இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை சுஷாந்த்தோபல் விடுதி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் குளித்துள்ளாா். அப்போது, அறையிலிருந்து வெளியே வந்த பா்னிகாதோபல் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்துவிட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.