மனநலம் பாதித்த பெண் ஆற்றில் மூழ்கி மரணம்
மனநலம் பாதித்த பெண் ஆற்றில் மூழ்கி மரணம்;
![மனநலம் பாதித்த பெண் ஆற்றில் மூழ்கி மரணம் மனநலம் பாதித்த பெண் ஆற்றில் மூழ்கி மரணம்](https://king24x7.com/h-upload/2025/01/30/787722-1000070159_1738214998122_1739599583282.webp)
விழுப்புரத்தை அடுத்துள்ள பொய்யப்பாக்கம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டபெண் பம்பை ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.சுமாா் 45 வயதுடைய பெயா், ஊா் தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விழுப்புரம் பொய்யப்பாக்கம் மற்றும் மேல்பாதி பகுதிகளில் சுற்றித்திரிந்தாராம்.இந்த நிலையில், அந்தப் பெண் செவ்வாய்க்கிழமை பொய்யப்பாக்கம் பம்பை ஆற்றில் குளிக்கச் சென்றபோது ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.இதுகுறித்து பொய்யப்பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் அ.அருண்ராஜ் அளித்த புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.