விழுப்புரம் அருகே நெல், எள் பயிா்களுக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி.
நெல், எள் பயிா்களுக்கு காப்பீடு செய்ய நாளை கடைசி.;

விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், நெல், எள் பயிா்களுக்கு காப்பீடு செய்ய வெள்ளிக்கிழமை (ஜன.31) கடைசி நாள் என்று வேளாண் துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் எம்.ஈசுவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பயிா் இழப்பை ஈடுசெய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும், விழுப்புரம் மாவட்டத்தில் 2024 - 25ஆம் ஆண்டு காரீப், சம்பா, ராபி பருவங்களில் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் நவரை பருவத்துக்கு 13 ஒன்றியங்களில் 294 கிராமங்களில் காப்பீட்டுக்கு அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நவரை பருவத்தில் நெல் - 3, எள் பயிரிட்டுள்ள விவசாயிகள் வெள்ளிக்கிழமைக்குள் (ஜன.31) காப்பீடு செய்துகொள்ள வேண்டும். நெல் ஏக்கருக்கு ரூ.517.50, எள் பயிருக்கு ரூ.165-ஐ பிரீமியத் தொகையாக செலுத்த வேண்டும்.எனவே, விவசாயிகள் தங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக காப்பீட்டுத்தொகை செலுத்தி பதிவு செய்யலாம். மேலும் விவரங்களை அறிய அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளாா்.