தாராபுரத்தில் பழனி பாபாவும் சமூக நீதியும் சமூகநீதி பாதுகாப்பு பொதுக்கூட்டம்

தாராபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் முஸ்லிம் முன்னேற்ற கழகம் இணைந்து நடத்திய பழனி பாபாவும் சமூக நீதியும் சமூகநீதி பாதுகாப்பு பொதுக் கூட்டத்தில் பாஜக அரசை  இந்து மக்களை ஏமாற்றுகிறது.;

Update: 2025-01-30 06:05 GMT
தாராபுரத்தில் பழனி பாபாவும் சமூக நீதியும் சமூகநீதி பாதுகாப்பு பொதுக்கூட்டம்
  • whatsapp icon
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி மற்றும் முஸ்லிம் முன்னேற்ற கழகம் இணைந்து நடத்திய பழனி பாபாவும் சமூக நீதியும் சமூகநீதி பாதுகாப்பு பொதுக்கூட்டம் தாராபுரம் அரசமரம் பகுதியில் நடைபெற்றது.  இந்த பொதுக்கூட்டத்திற்கு அப்துல் கய்யூம் தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் அப்சல் வரவேற்புரை ஆற்றினார். தெற்கு மாவட்ட செயலாளர் முனீப் ரகுமான் முன்னிலை வகித்தார். ம.ம.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப். தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு. விசிக மாநிலத் துணைச் செயலாளர் வன்னிஅரசு. ஆகியோர் கலந்து கொண்டு பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினர். இதில் சமூக நீதிப் போராளி பழனிபாபாவின் 28-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது அப்போது பழனிபாபா சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் குறித்து தலைவர்கள் எடுத்துரைத்தனர்.  இந்த பொதுக்கூட்டத்தில்  கொங்கு இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் தனியரசு பேசுகையில் :- இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பாஜக மோடி அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் செயல்படவில்லை அவர்கள் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், ஆகியோருக்கு எதிராக செயல்படுபவர்கள். போலியான மத நம்பிக்கையை மையமாக வைத்து இந்துத்துவா அமைப்புகளில் தத்துவங்களை முன்னெடுத்து இந்தியாவில் வாழும் இந்துக்களையும் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் அடிமைப்படுத்தி ஏமாற்றி வருகின்றனர்.  பெருவாரியான இந்துக்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக பொய்யான இந்து சம்பாரதாயங்களை இந்துக்களுக்கே உரியது என தெரிவிக்கின்றனர்.  இதில் பெருவாரியான இந்துக்கள் பாதிக்கப்படுகின்றனர் இதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் ஜாதி மத இன பேதமின்றி வாழ்ந்து வந்த தமிழனை மதத்தின் பெயரால் பிரித்து இந்தி மொழியை திணிக்க நினைக்கும் பாஜகவை மோடி அரசை இந்துத்துவ அமைப்புகளை இந்துக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது அவர்கள் அனைவரும் அவர்களது சுயநலத்திற்காக செயல்படுபவர்கள் மறைந்த பழனி பாபா அவர்கள் ஒரு சமூகப் போராளி ஒரு மதத்திற்கான ஒரு இனத்திற்கான தலைவர் அல்ல அவர் அனைத்து சமூகத்திற்கும் ஏற்ற தலைவர் அவருடைய கருத்துக்களால் தெளிவடைந்து விடுவார்கள் என்று நினைத்து பொள்ளாச்சியில் வைத்து அவரை சுட்டு கொன்றுவிட்டனர் ஆர் எஸ் எஸ் காரர்கள் ஆனால் அவர் இறந்தாலும் அவர் சொன்ன கருத்துக்களையும் தத்துவங்களையும் இன்று வரை மாற்ற முடியாது அவர் அன்று சொன்ன கருத்துக்கள் இன்று நடைமுறையில் இருந்து வருகிறது. எனவே பழனிபாபா போன்ற உன்னதமான மனிதர்களை போற்றி புகழ்வதில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை பெருமை அடைகிறது என இவ்வாறு அவர் தெரிவித்தார்.  வீசிக மாநில துணைப் பொதுச் செயலாளர். வன்னிஅரசு பேசுகையில்; மாவீரன் பழனி பாபா அவர்களுக்கு ஆண்டு தோறும் நினைவேந்தல் நடத்தும் ஒரே கட்சி விசிக கட்சி தான் ஆண்டுதோறும் நடத்திக் கொண்டிருக்கிறோம். மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கட்சியினர் பழனிபாபாவிற்காக ஆண்டுதோறும் பொது கூட்டம் நடத்த வேண்டும் அவரின் அன்றைய கால செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களை விழிப்புணர்வு அடையச் செய்ய வேண்டும் டாக்டர் அம்பேத்கர் பெரியார் போன்ற சமூக போராளிகளை போன்றவர் பழனி பாபா என புகழாரம் சூட்டினார்.  இந்த பொதுக்கூட்டத்தில் 1000, மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News