பனை மரத்தில் கள்ளு இறக்க அனுமதி வழங்க கோரி சாலை மறியலில்
பனை மரத்தில் கள்ளு இறக்க அனுமதி வழங்க கோரி சாலை மறியலில்;

செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் வட்டம் கொடூர் குறுவட்டம் 109 வடபட்டினம் கிராமம் இசிஆர் சாலையில் நேற்று மாலை சுமார் 3.15 முதல் மணி முதல் 3.30 மணி வரை முகையூர் கானத்தூர் வடபட்டினம் கூவத்தூர் கிராம மக்கள் சுமார் 60 நபர்கள் ஆண்கள் 3௦ பெண்கள் பனை மரத்தில் கள்ளு இறக்க அனுமதி வழங்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.பின்னர் காவல்துறையின் அறிவுறுத்தலின்படி சாலையோரம் நின்று போராட்டம் செய்து வந்தனர். தங்களது கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இந்நிலையில் மாலை 5:45 மணி அளவில் செய்யூர் வட்டாட்சியர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதின் பேரில் மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.