அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.
மதுரை கள்ளிக்குடி அருகே அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்டது.;

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பிட். 1 கிராம நிர்வாக அதிகாரி ஜெயசக்தி என்பவர் நேற்று (ஜன.29) காலை வடக்கம்பட்டியில் இருந்து கரிசங்குளம் செல்லும் பாதையில் 40 வயதிலிருந்து 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் சடலம் இருப்பதாக தகவல் அறிந்து இது தொடர்பாக கள்ளிகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி இறந்தவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.