முதல்வர் வருகையை முன்னிட்டு சுவர் விளம்பரம் பணி தீவிரம்
நெல்லைக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வருகை;
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வருகின்ற பிப்ரவரி 6,7ஆம் தேதிகளில் நெல்லையில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனை முன்னிட்டு அவரை வரவேற்கும் விதமாக மானூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சுவர் விளம்பரங்கள் எழுதும் பணி இன்று முதல் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.இந்த பணிகளை மானூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அருள்மணி பார்வையிட்டார்.