
குமரி மாவட்ட நெடுஞ்சாலை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக பாரம் ஏற்றி செல்வதாகவும், குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி நெடுஞ்சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்வதால், அதிகளவில் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், இவற்றை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டுநர்கள், தனியார் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்ததின் பேரில், சித்திரங்கோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு எடை மேடை நிலையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை நிர்ணயித்த நேரத்தை தவிர மற்ற நேரத்தில் கனிம வாகனங்கள் செயல்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.