வாக்குச் செலுத்திட வாகன வசதி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குச் செலுத்திட வாகன வசதி அதிகாரிகள் தகவல்;

Update: 2025-01-30 06:33 GMT
வாக்குச் செலுத்திட வாகன வசதி
  • whatsapp icon
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் 85 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்குச் சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை செலுத்திட வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக 237 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இத்தொகுதிக்குள் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 2,529 பேர் உள்ளனர். மாற்றுத்திற்னாளிகள் 1,570 பேர் உள்ளனர்.இவர்களில், 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது வாக்குகளை செலுத்திட ஏதுவாக அவர்களை வாக்குச் சாவடிக்கு அழைத்துச் செல்லவும், வாக்களித்த பின்னர் மீண்டும் வீடுகளுக்கு கூட்டிச் செல்லவும், தேர்தல் ஆணைய உத்தரவின்படி வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த வாகன வசதி தேவைப்படுவோர் மாவட்ட தேர்தல் தொடர்பு மையத்தை 0424 – 1950, கலெக்டர் அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறையை 0424 – 2267674, 2267675 மற்றும் 96004 79643 ஆகிய எண்களிலும், மேலும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 0424 ஆகியவற்றிலும் தொடர்பு கொள்ளலாம்.இதுதவிர 3 சக்கர வாகனம் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிப்பட்டுள்ள சக்சாம் ஆப்மூலமாகவும் விண்ணப்பித்து பெறலாம் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News