சிக்கன் கடைகளால் கண் எரிச்சல் ஏற்படுவதால், விபத்து அபாயம்
நூற்றுக்கும் மேற்பட்ட சில்லி சிக்கன் கடைகளால் கண் எரிச்சல் ஏற்படுவதால், விபத்து அபாயம் கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் புகார் ;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நூற்றுக்கும் மேற்பட்ட சில்லி சிக்கன் கடைகளால் கண் எரிச்சல் ஏற்படுவதால், விபத்து அபாயம் என, கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் புகார் தெரிவித்தனர். குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன்,நகராட்சி ஆணையர் கணேசன் (பொ) தலைமையில் நடந்தது. இதில் நடந்த விவாதங்கள் பின்வருமாறு: கதிரவன் (தி.மு.க.): எனது வார்டில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியின் பொன்விழா நிகழ்வில் அனைவரும் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி. வடிகால் தூய்மை பணிக்கு ஆட்கள் வருவது இல்லை. பலமுறை சொல்லியும் பலனில்லை. ஆட்கள் பற்றாக்குறை என்கிறார்கள். இது குறித்து ஆலோசித்து ஆட்கள் அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். தர்மராஜன் (தி.மு.க.): எனது வார்டில் சுகாதார பணிக்கு ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளதா? இல்லையா? ஐயப்பன் கோவில் சாலை புதிய சாலையாக அமைக்க வேண்டும். சுமதி (சுயேட்சை): வடிகால் தூய்மை பணிக்கு ஆட்கள் வர சொல்லி எந்த பலனும் இல்லை. பல நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. பரிமளம் (தி.மு.க.): சேலம் சாலை சவுண்டம்மன் கோவில் பகுதியிலிருந்து, கத்தேரி பிரிவு சாலை வரை இரு புறமும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள் உள்ளன. இதில் சில்லி சிக்கன் சாலையில் போடுவதால், சாலையில் செல்லும் போதுமகக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு விபத்து அபாயம் ஏற்படுகிறது. இந்த ஓட்டல்களுக்கு நகராட்சி சார்பில் அறிவுறுத்தல் செய்து, அடுப்பு இருக்கும் இடத்தில் உள்ள வெப்பக்காற்று வெளியேற்றும் பேனை, மேலும் சற்று உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலசுப்ரமணி (அ.தி.மு.க.): அய்யன்தோட்டம் பகுதியில் குடிநீர் சரியாக வருவது இல்லை. உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிபாளையம் சாலை, கவுரி மெஸ் ஓட்டலில் வெளியேறும் கழிவுநீர், கருமாரியம்மன் கோவில் வழியாக வருவதால் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.சுகாதார அலுவலர் ராமமூர்த்தி : அந்த ஓட்டல் உரிமையாளருக்கு வெங்கடேசன் (நகராட்சி துணை தலைவர், தி.மு.க.): சுகாதாரத்துறை மெத்தனமாக உள்ளது அவர்கள் தங்கள் பணிகளை சரிவர செய்திட வேண்டும். ஒப்பந்ததாரர் வசம் எந்த பணியை சொன்னாலும், பில் வரவேண்டியுள்ளது. வந்தால்தான் பணிகள் செய்ய முடியும் என்கிறார்கள். உண்மை நிலை என்ன? ராஜேந்திரன் (பொறியாளர்): நகராட்சிக்கு வரும் வருமானம் சுமார் ஒரு கோடி ரூபாய் வரவேண்டியுள்ளது. அது வந்ததும், பணிகள் அனைத்தும் செய்து விடலாம். புருஷோத்தமன் (அ.தி.மு.க.): சுகாதார பணிகள் சரியாக நடப்பது இல்லை. பலமுறை சொல்லியும் பலனில்லை. கணேசன் ( பொறுப்பு ஆணையாளர்): நகராட்சி சார்பில் திட்ட நிதியில் செய்யப்படும் பணிகள் செய்யமுடிகிறது. ஆனால் வருவாய் நிதி மூலம் நடத்தப்பட வேண்டிய பணிகள் நிலுவையில் உள்ளது. விரைந்து வசூல் செய்து, அனைத்து பணிகளை செய்து விடலாம். வேல்முருகன் (சுயேட்சை ): சாக்கடை தூய்மை செய்வது இல்லை. பைப் லைன் அமைக்க வேண்டும். மரங்கள் பெரிய அளவில் வளர்ந்ததால், மின் கம்பியில் உரசி விபத்து அபயம் ஏற்பட்டுள்ளது. அதனால் உயரமாக உள்ள மரக்கிளைகளை வெட்ட வேண்டும். ரேவதி (அ.தி.மு.க.): எங்கள் வார்டில் செப்டிக் டேங்கு அமைக்க வேண்டும். கோவிந்தராஜ் (தி.மு.க.) எங்கள் வார்டில் தூய்மை பணி செய்ய ஆட்கள் வருவது இல்லை. வந்த ஆட்களை கூட நிறுத்தி விட்டார்கள். மேற்பார்வையாளர் என்பவர் என்ன செய்கிறார்? பெட்ரோல் போட்டுகொண்டு வாகனத்தில் வலம் வந்து கொண்டுள்ளார். இவரால் யாருக்கு என்ன லாபம்? மகேஸ்வரி : (தி.மு.க.) எங்கள் வார்டில் அங்கன்வாடி மையம் அமைக்க இடம் உள்ளது. ஆகவே அங்கு அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பைப் லைன் அமைக்க வேண்டும். (இது சம்பந்தமாக விண்ணப்பம் ஒன்றினை நகராட்சி தலைவர் வசம் மகேஸ்வரி கொடுத்தார். விஜய்கண்ணன் ( நகராட்சி தலைவர் ): ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் போது, குப்பைகள் கொட்ட இடம் நிறைய கிடைக்கும். அதில் குப்பைகளை கொட்ட நடவடிக்கை எடுக்கலாம். இதில் நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.