வீட்டின் உள்தாழ்ப்பாளை போட்டு சிக்கிக்கொண்ட குழந்தை மீட்பு

மயிலாடுதுறை அருகே வீட்டின் உள்ளே தவறுதலாக தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு சிக்கிக் கொண்ட இரண்டரை வயது குழந்தையை தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்;

Update: 2025-01-30 16:48 GMT
மயிலாடுதுறை மாவட்டம் சித்தர்காடு பகுதியில் அசோக்குமார் மற்றும் மீனாட்சி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு யாழினி என்ற இரண்டரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் மீனாட்சி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றபோது எதிர்பாராத விதமாக வீட்டின் கதவை உள்ளே இருந்து குழந்தை தாழ்ப்பாள் போட்டு சிக்கிக்கொண்டது. பின்னர் மீனாட்சி கதவை திறக்க வெகு நேரம் முயற்சித்தும் திறக்க முடியாததால் குழந்தை அழ துவங்கியுள்ளது. இதனை தொடர்ந்து மயிலாடுதுறை தீயணைப்பு துறையினருக்கு அக்குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் பெரிய ரக சுத்தியை கொண்டு கதவினை உடைத்து ஓரிரு நிமிடத்தில் வீட்டினுள் மாட்டிக்கொண்டு இருந்த குழந்தையை பத்திரமாக மீட்டனர். பின்னர் குழந்தையை தாய் மீனாட்சி ஆற தழுவி சமாதானப்படுத்தினார். மேலும் துரிதமாக செயல்பட்ட மயிலாடுதுறை தீயணைப்பு துறையினருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Similar News