மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி துவக்கம்

மயிலாடுதுறையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் 2024-2025-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியை எம்எல்ஏ நிவேதா முருகன் தொடக்கி வைத்தார்;

Update: 2025-01-30 16:54 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 2024- 2025 ஆம் ஆண்டுக்கான பாரதியார் தினம் மற்றும் குடியரசு தின மாநில அளவிலான குத்துச்சண்டை விளையாட்டு போட்டி நடைபெற்றது. கடந்த 28-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியில் முதல் மூன்று நாட்கள் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று ஆண்களுக்கான போட்டிகள் தொடங்கின. இந்த போட்டியை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவுமான நிவேதா எம்.முருகன் தொடக்கி வைத்தார். தொடர்ந்து அவர் மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார். இதில் உடற்கல்வி ஆய்வாளர்கள், நடுவர்கள், மாணவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News