சேதம் அடைந்த நெற்பயிர்களை பார்க்காத அதிகாரிகள் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையில் சேதம் அடைந்த நெற்பயிர்கள் குறித்து முறையாக கணக்கீடு செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டி கூட்டத்தை புறக்கணித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம்;

Update: 2025-01-30 16:59 GMT
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 18ஆம்தேதி பருவம் தவறி பெய்த கனமழையில் சாகுபடி செய்யப்பட்டு இருந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிரில் 68,000 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பயிர் சேதங்கள் குறித்து வருவாய்த்துறையினர் முறையாக கணக்கீடு செய்யவில்லை என்றும், கணக்கீடு செய்யும் பணிகளையே துவங்கவில்லை என்று குற்றம் சாட்டி சேதம் அடைந்து முளைத்த நெற்பயிர்களை காண்பித்து கூட்ட அரங்கில் கண்டனம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்க கோரி முழக்கமிட்டனர். தொடர்ந்து வெளிநடப்பு செய்த விவசாயிகள் 20க்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவலக வாயிலில் கையில் எடுத்து வந்திருந்த சேதம் அடைந்து முளைத்த நெற்பயிர்களை கீழே போட்டு நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News