கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு

வழக்கு;

Update: 2025-01-31 03:45 GMT
கள்ளக்குறிச்சியில் கடந்தாண்டு ஜூன் 19ம் தேதி கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி., போலீசார் 24 பேரை கைது செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கு விசாரணையை சி.பி.ஐ., க்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் கடந்தாண்டு நவ., 20ம் தேதி உத்தரவிட்டது. அதன்பேரில், சி.பி.ஐ., அதிகாரிகள் கடந்த 22ம் தேதி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த இடங்களை பார்வையிட்டு விசாரணையை துவக்கினர். அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கை, செங்கல்பட்டு தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி சிபிஐ., அதிகாரிகள் மனு அளித்துள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கில் சிறையில் உள்ளவர்களில் 5 பேர் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Similar News