மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

வழங்கல்;

Update: 2025-01-31 03:51 GMT
சிறுவங்கூரில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார்.எலும்பு முறிவு மருத்துவர் பாலசுப்ரமணியன், கண் மருத்துவர் லோகநாயகி, மனநல மருத்துவர் உஷாநந்தினி, காது மூக்கு தொண்டை மருத்துவர் கணேஷ் ராஜா, முடநீக்கியல் வல்லுார் பிரபாகரன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்று மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்தனர். அதில் 73 மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

Similar News