
விக்கிரவாண்டி வட்டம், ஒரத்தூா், நத்தமேட்டு தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் மனைவி ஜீவனா. இவா்களுக்குத் திருமணமாகி 8 ஆண்டுகளாகும் நிலையில், 2 பிள்ளைகள் உள்ளனா்.ஜீவனாவுக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்ததாம். இதனால், விக்கிரவாண்டி வட்டம், பனையபுரத்தில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்று தங்கியிருந்தாா். இந்த நிலையில், வியாழக்கிழமை வயிற்று வலியால் அவதிப்பட்ட அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரவாண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.