சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் நகராட்சி தலைவரிடம் கோரிக்கை
குமாரபாளையம் சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், தங்கள் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கி தர கோரி, நகராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுத்தனர்.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் புதிய கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் அம்மா உணவகம் உள்ள பகுதியில்தான் பேருந்துகள் வந்து பயணிகளை ஏற்றியும், இறக்கியும் வருகின்றனர். இங்கு நிறுத்தி வைத்திருந்த சுற்றுலா வாகனங்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவை நிறுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளதால், சுற்றுலா வாகன ஓட்டுனர்கள், தங்கள் வாகனங்களை முன்பிருந்தது போல் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நிறுத்த அனுமதி கேட்டு, நகராட்சி அலுவலகத்தில், நகராட்சி தலைவரிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர். ஆணையாளர், பொறியாளர் ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து சுற்றுலா வாகனங்கள் நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கவிருப்பதாக நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் உறுதி கூறினார்.