அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம்
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடந்தது.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம், தட்டாங்குட்டை ஊராட்சி, வாசுகி நகர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது. கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை நாகரத்தினம் வாழ்த்தி பேசினார். குமாரபாளையம் அரசு மருத்துவமனை சித்தா பிரிவு டாக்டர் சுகந்தி பங்கேற்று, சித்த மருத்துவ பயன்கள் குறித்து பேசினார். வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் சரவணாதேவி பங்கேற்று நாட்டு நலப்பணி திட்டத்தில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பது குறித்து பேசினார். அனைவரும் தொழுநோய் ஒழிப்பு உறுதி மொழி எடுத்தனர். பேராசிரியர்கள் ஞானதீபன், அருள், சின்னப்பன், சுகன்யா உள்பட பலர் பங்கேற்றனர். பேராசிரியர் ரமேஷ் இதற்கான ஏற்பாடுகளை செய்தார். .