. மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை மற்றும் பொது நூலக இயக்ககம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா இன்று தொடங்கியது. மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியில் ஜன.31 தொடங்கி பிப்.10-ஆம் தேதி வரை காலை 10 மணிமுதல் இரவு 9 மணி வரை இந்த புத்தகத்திருவிழா நடைபெறவள்ளது.. இதில், 60 புத்தக அரங்குகள், உணவு திருவிழா, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகள், அறிவியல் கோளரங்கம் ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பங்கேற்று ரிப்பன் வெட்டி 3-வது புத்தகத் திருவிழாவை தொடக்கி வைத்து பேசினார். தொடர்ந்து, முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.