வானூர் அருகே மின்சாரம் தாக்கி ஓட்டல் உரிமையாளர் பலி
மின்சாரம் தாக்கி ஓட்டல் உரிமையாளர் பலி;
விழுப்புரம் மாவட்டம்,வானூர் அருகே. நெமிலி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரராஜ் ( 45). இவர் நெமிலியில் திருவக்கரை மெயின் ரோட்டில் ஓட்டல் மற்றும் வெல்டிங் ஒர்க்ஷாப் வைத் துள்ளார். இவருக்கு துளசி என்ற மனைவியும் 3 மகன்களும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று அதிகாலையில் தனது வீட்டில் மாவு அரைப்பதற்காக கிரைண்டர் சுவிச்சை போட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர்,சுந்தரராஜை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து பார்த்தபோது,சுந்தரராஜன் இறந் துபோனது தெரியவந்தது.இதுபற்றி தகவல் அறிந்த வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுந்தரராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.