யு ஜி சி வரைவு அறிக்கையை எதிர்த்து மாணவர்கள்போராட்டம்

தமிழகம் முழுவதும் யூஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி மாணவர்கள் தன்னெழுச்சியாக மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் தொடரும் என ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் - கோவி.செழியன்* மயிலாடுதுறை அருகே காளகஸ்தினாபுரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் அமைச்சருக்கு கோவி செழியன் பேட்டி;

Update: 2025-02-01 09:12 GMT
1965 ம் ஆண்டு இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர்கள் போராடியது போல் யுஜிசி வரை வரைவு அறிக்கையை திரும்ப பெறக்கோரி மாணவர்கள் ஒன்றிய அரசை கண்டித்து யுஜிசி வரைவு அறிரக்கையை திரும்ப பெற வலியுறுத்தி மாணவர்களின் தன்னெழுச்சி மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் தொடரும் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் காளகஸ்த்திநாதபுரத்தில் ஒன்றிய அரசின் யூஜிசி வரைவரிக்கையை திரும்ப பெறக்கோரி மாணவர்களின் மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது‌‌. அதில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் அமைச்சர் கோவி.செழியன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், சர்வாதிகார போக்கொடு ஒன்றிய அரசும், ஆளுநரும் செயல்படுகிறனர். 10 ஆம் வகுப்பு முதல் இளநிலை, முதுகலை, முனைவர் பட்டம் வரை அதிக மாணவர்கள் உடைய மாநிலமாக இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் திகழ்கிறது. இந்த வளர்ச்சியை பொறுக்க முடியாத ஒன்றிய அரசு புதிய வரைவு நெறிமுறைகளை மாற்றியுள்ளது. இந்த புதிய யுஜிசி வரைவு நெறிமுறை மாணவர்களை சீர்கெடுக்கும் முயற்சி, கல்வி புலமை மிக்கவர்கள் மட்டுமே துணை வேந்தர்களாக நியமனம் செய்யப்பட்டு வந்த நிலையில், கல்வித்துறை சாராத பொதுத்துறையை சேர்ந்தவர்களையும் துணை வேந்தர்களாக நியமிக்கலாம் என்ற புதிய வரைவு கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது‌. தமிழக அரசின் பிரதிநிதி துணை வேந்தர் நியமனம் செய்யும் பொறுப்பில் இல்லை. தமிழகம் முழுவதும் யூஜிசி வரைவு அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி மாணவர்கள் தன்னெழுச்சியாக மின்னஞ்சல் அனுப்பும் போராட்டம் தொடரும் என ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்நிகழ்வில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

Similar News