கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது;
கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், புவனகிரி, குறிஞ்சிப்பாடி, வேப்பூர், விருத்தாசலம், சிதம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை பரவலாக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.