மீனாட்சிப்பேட்டை: காடுவெட்டி குரு பிறந்த நாள் விழா
மீனாட்சிப்பேட்டையில் காடுவெட்டி குரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது;
முன்னாள் வன்னியர் சங்க தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவீரன் ஜெ குரு பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே மாவீரன் மஞ்சள் படை நிர்வாகிகள் குரு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் இனிப்புகள் வழங்கப்பட்டது. இது மட்டும் இல்லாமல் பல்வேறு இடங்களில் காடுவெட்டி குரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.