ஆவினங்குடி: காவல் துறையினர் மூலம் விழிப்புணர்வு
ஆவினங்குடி காவல் துறையினர் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது;
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள்களின் தீமைகள் குறித்தும், போக்குவரத்து விதிமுறைகள், சைபர் குற்றங்கள் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இது மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.