கல்வி மறுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த நான் இன்றைக்கு அமைச்சர்

எந்த சமூகத்திற்கு கல்வி மறுக்கப்பட்டதோ அந்த சமூகத்தை சேர்ந்த கோவி. செழியன் ஆகிய நான் இன்று உயர்கல்வி அமைச்சராக உள்ளேன்.  இதற்குக் காரணம் அம்பேத்கர் பெரியார் கலைஞர் வழியில் ஆட்சி நடத்தும் மு.க ஸ்டாலின்  அமைச்சர் கோவி. செழியன் பேச்சு;

Update: 2025-02-02 03:24 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவில் ஒன்றியத்தில் ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்றது. இதில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர். அப்பொழுது ஆக்கூர் ஊராட்சி உடையார் கோவில் பத்து பகுதியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில்  அமைச்சர் கோவி.செழியன் பேசினார். தான் ஏழை எளிய குடும்பத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்தவன் என்ற போதிலும் தன் தொகுதியில் மூன்று முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒட்டுமொத்த மக்களின் ஒட்டுமொத்த சமுதாய மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளேன் என்றும் மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்பொழுதும் அடித்தட்டு மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாகவும் அனைத்து திட்டங்களையும் செய்வதாகவும் இதனால் தான் நம் மக்கள் முன்னேற முடிகிறது படித்து முன்னேற முடிகிறது பட்டங்கள் பெற முடிகிறது வாழ்க்கை தரம் உயர்கிறது. தீப்பிடித்து எரியாத வீடுகளை இந்தியாவில் முதன்முதலாக கட்டித் தந்தவரும் கலைஞர்தான், அம்பேத்கர் அமைத்து  தந்த சட்ட பாதுகாப்பும், தந்தை பெரியாரின் புரட்சியும் அதை சட்டம் ஆக்கித் தந்த கலைஞரால்தான் இன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி கிடைத்தது. அந்த வழியில் தற்போது முதலமைச்சர் ஸ்டாலினும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எதிர்காலத்தில் உதயநிதி ஸ்டாலினும் செயல்படுவார். எந்த சமூகத்திற்கு கல்வி மறுக்கப்பட்டதோ அந்த சமூகத்தைச் சேர்ந்த  கோவி. செழியன் ஆகிய நான் இன்று உயர்கல்வி அமைச்சராக உள்ளேன். மக்களின் முன்னேற்றத்திற்கு உழைக்கும் முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு பக்கபலமாக இருக்க வேண்டுமென்றார்.

Similar News