அமைச்சரிடம் மனு

சிவகிரியில் தியாகி குமரன் சிலை வளாகத்திற்கு படிப்பகம் அமைப்பதை கைவிட்டு மாற்று இடத்தில் நிறுவக்கோரி அமைச்சரிடம் பொதுமக்கள் மனு;

Update: 2025-02-02 11:26 GMT
சிவகிரியில் தியாகி குமரன் சிலை வளாகத்திற்குள் படிப்பகம் அமைப்பதை கைவிட்டு மாற்று இடத்தில் நிறுவக்ககோரி அமைச்சரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். இதுகுறித்து ஈரோடு மாவட்டம் சிவகிரி நெசவாளர் காலனியை சேர்ந்த துரைசாமி தலைமையில் பொதுமக்கள் நேற்று ஈரோடு பெரியார் நகரில் அமைச்சர் சு.முத்துசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: சிவகிரியில் அமைந்துள்ள தியாகி கொடிகாத்த குமரன் உருவசிலையை வெண்கல சிலையாக அமைக்க அறிவிப்பு வெளியிட்டதற்கு வரவேற்கிறோம். அதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் முத்துசாமிக்கு எங்களது நன்றியை தெரிவிக்கிறோம். ஆனால், தியாகி குமரன் சிலை வளாகத்திற்குள் படிப்பகம் அமைப்பதாக அறிவித்துள்ளனர். அந்த முடிவை கைவிட்டு மாற்று இடத்தில் படிப்பகத்தை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக செங்குந்தர் குல பொதுமக்கள் சார்பாக நடநத் ஆலோசனை கூட்டத்திலும் படிப்பகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்

Similar News