போக்சோவில் கைது
பிளஸ் 2 மாணவிக்கு காதல் டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு;
பிளஸ் 2 மாணவிக்கு காதல் டார்ச்சர் வாலிபர் மீது போக்சோ வழக்கு பதிவு ஈரோடு, பிப். 2: ஈரோட்டில் பிளஸ் 2 மாணவிக்கு காதல் டார்ச்சர் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்தனர். ஈரோடு மணல்மேடு முத்துக்குமாரசாமி வீதியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் பரணிதரன் (30). கூலி தொழிலாளி. இவர், ஈரோட்டை சேர்ந்த 17 வயதான பிளஸ் 2 மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி காதல் டார்ச்சர் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோரிடம் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் பெற்றோர் மாணவியுடன் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் பரணிதரன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர