சின்னாண்டிக்குப்பம்: கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ
சின்னாண்டிக்குப்பம் கிராமத்தில் கும்பாபிஷேக விழாவில் சிதம்பரம் எம்எல்ஏ பங்கேற்றார்;
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சின்னாண்டிக்குப்பம் கிராமத்தில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீசெல்வ விநாயகர், ஸ்ரீ சிவன், ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் சப்த கன்னி ஆலய மகா கும்பாபிஷேத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ கலந்து கொண்டு சிறப்பித்தார். உடன் அதிமுக நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.