ராமநாதபுரம் துணை முதலமைச்சர் திருமண விழாவில் பங்கேற்பு

திமுக இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா இல்ல திருமண விழாவில் துணை முதல் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு;

Update: 2025-02-02 13:29 GMT
ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளரும் மண்டபம் பேரூராட்சி சேர்மன் ராஜா ஆகியோர் இல்ல திருமண விழா மண்டபம் குஞ்சார் வலசை பகுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமகன் மருத்துவர் தில்லை ராஜ்குமார் மணமகள் மருத்துவர் சக்தி பிரியா ஆகியோரின் திருமணத்தை நடத்தி வைத்தார் இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட கழக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதனைத் தொடர்ந்து மாவட்ட முழுவதும் பல்வேறு பகுதிகளில் திமுக கட்சியினர் வழி நெடுகிலும் இரு வண்ண கருப்பு சிகப்பு கொடிகளை கட்டி சிறப்பான வரவேற்பு கொடுத்தனர் பிரமாண்டமான திருமண ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா மற்றும் மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, ஜெயந்தி மருத்துவர் சக்தி முருகேசன் ஆகியோர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்

Similar News