அடையாளம் தெரியாத ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை
ஆண் சடலம் குறித்து போலீசார் விசாரணை;
திண்டிவனம், ஒலக்கூரிலிருந்து பாஞ்சாலம் செல்லும் சாலையிலுள்ள புல்லா குளத்தில் அழுகிய நிலையில் 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் இறந்து கிடந்தார். இதுகுறித்து வி.ஏ.ஓ.,சீனுவாசன் அளித்த புகாரின் பேரில், ஒலக்கூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.